Thursday, 28 January 2016

சதுரகிரியில் 3247 வருடங்களுக்கு முன் நடந்த யாகம்!

அகத்தியப் பெருமானின் உத்தரவால், அவர் மேற்பார்வையில் பல யாகங்களை இந்த உலகத்துக்காகவும், இவ்வுலக மாந்தர் செழிப்பாகவும் வாழ்ந்திட நாடியில் வந்து அருளியுள்ளார். அவை ஒவ்வொன்றும் நடந்து முடிந்தவுடன், ஒன்றைவிட மற்றொன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது கண்டு பலமுறை வியந்துள்ளேன்.
அப்படி ஒருநாள், சதுரகிரியில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட முஹுர்த்தத்தில், அதற்கென நான்கு வேதங்களை பயின்று தொண்டாற்றிவரும் நான்கு பேரையும் காட்டித்தந்து, யாகத்தில் சேர்க்க வேண்டிய மூலிகைகளை அறிவுறுத்தி போகச்சொன்னார். என் உடல் நிலை சதுரகிரி ஏற உதவுமா என்கிற சந்தேகம் இருந்ததால் நான் செல்வதை பற்றி சற்று கவலையுடன், அதே சமயத்தில் வருத்தத்துடன் அவரிடம் தெரிவித்தேன்.
"உன் சார்பாக வேறு ஒருவரிடம் அந்த தகுதியை கொடுத்து அனுப்பி மேற்பர்வையிடச்சொல், சொன்னபடி செய்யவேண்டும், எந்த தவறும் நடக்ககூடாது" என்றார்.
அவரே, காட்டித்தந்த நண்பரை அழைத்து, " இது அகத்தியர் உத்தரவு. உங்களிடம் இந்த பெரும் பொறுப்பை கொடுத்துள்ளார். எப்பாடுபட்டேனும் இதை சிரம் மேற்கொண்டு நடத்திக் கொடுக்கவேண்டும்" என்று வேண்டிக் கொண்டேன்.
நண்பரும் அதை சிரம் மேற்கொண்டு செய்வதாக கூறி அதற்கான ஏற்பாடுகளை அவர் நண்பர் வாயிலாக, அகத்தியர் அடியவர்கள் துணையுடன் ஏற்பாடு செய்தார்.
சுமார் ஒரு 50 பேர் அடங்கிய குழு சதுரகிரியை நோக்கி பயணம் செய்தது.
சதுரகிரி மலை என்பது மிக கடினமான பாதைகளை உள்ளடக்கியது. தனி ஒரு மனிதனாக எறிச்சென்றாலே, மேலே சென்றடைந்ததும், ஒரு வழியாகி, எங்கேடா இடம் கிடைக்கும், சற்று நேரம் கிடந்தது உறங்கலாம் என்று தோன்றும். அதுவும் யாக சாமான்களுடன் மலை ஏறி சென்று, நல்ல இடம் தேடி அமர்ந்து யாகத்தை நடத்தி, திரும்பி வந்து சேரும் முன் ஒரு வழியாகிவிடுவோம்.
மலை ஏறும் முன் தலைமை வகித்தவர் என்னை தொடர்புகொண்டு தாணிப்பாறை என்கிற இடத்திலிருந்து பேசினார்.
"ஒன்றும் கவலைப் படவேண்டாம். இது அகத்தியர் மேற்ப்பார்வையில் நடக்கிற யாகம். அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். எல்லாம் சரியாக நடக்கும். பயம் வேண்டாம். அவரை நம்பி, அடிவாரத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு உங்கள் பயணத்தை தொடங்குங்கள்" என்றேன் நான்.
அப்படி சொன்னேன் என்றாலும், எனக்குள்ளும், ஒரு சிறு கலக்கம். ஒரு போதும் இப்படி அமைந்ததில்லை. அதுதான் ஆச்சரியம்.
"சரி! எது நடந்தாலும், அகத்தியர் இருக்கிறார்.அவர் பார்த்துக் கொள்வார்" என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்.
சதுரகிரி போன்ற மலை இடங்களில், தொலை தொடர்பு என்பது அந்த காலத்தில் இல்லாமல் இருந்தது. ஆகவே, மேலே சென்ற ஒருவர், கீழே பூமிக்கு வந்து நம்மை தொடர்பு கொண்டால் தான் நமக்கு செய்தி. அல்லது அகத்தியரை நாடியில் பிடித்து "சொல்லுங்கள் குருநாதா! என்ன நடந்தது! எப்படி நடந்தது!" என்று கேட்கவேண்டும்.
எனக்கு நாடியில் கேட்க்க விருப்பம் இல்லை. ஏன் என்றால், அகத்தியரே அங்கு சென்று யாகத்தில் அமர்ந்திருப்பார். அந்த நேரம் பார்த்து நான் கேட்க்க, அவரும் கோபத்தால் திட்டிவிடுவார். அதனால், பொறுமையாக இருந்தேன்.
யாகத்துக்கு அடுத்தநாள், கீழே இறங்கிய ஒருவர் என்னை தொடர்பு கொண்டு யாகம் மிகச் சிறப்பாக நடந்தது என்றும், நாடியில் வந்து அகத்தியர் என்ன சொன்னார் என்றும் கேட்டார்.
நான் நாடியில் எதுவும் கேட்கவில்லை என்றும், நீங்கள் எல்லோரும் திரும்பி வந்து அமர்ந்திருக்கும் போது அகத்தியரிடம் முழுமையாக கேட்டுவிடலாம் என்று நினைத்துள்ளேன் என்று கூறினேன்.
சதுரகிரி மலை ஏறி யாகம் செய்து, இறங்கி வந்த களைப்பு விலகிய பின் ஐந்தாவது நாள் அனைவரும் வந்து அமர்ந்த பொழுது நாடியில் பிரார்த்தனையுடன் அகத்தியரை நாடினேன்.
முதலிலேயே ரகசியம் காக்க எனக் கூறி ஒரு சில விஷயங்களை கூறிய பின் சதுரகிரி யாகத்துக்கு வந்தார்.
"சதுரகிரி மலை சென்று ஆங்கோர் அகத்தியன் தவம் செய்த காட்ச்சிகளை காண்க, கண்டு உணர்க என்று சொன்னேன். அன்னவனும் தலை மேல் அப்பொறுப்பை ஏற்று, இஷ்டமித்திர நண்பர்களுடன் ஏகினான் மலைக்கு. அதுவரை எவ்வித தடங்கலும் இல்லாமல் இருப்பதற்கு, அகத்தியனே யாம் ஒரு சட்டை முனியையும் ஆங்கொரு ராமதேவனையும் சேர்த்து அனுப்பித்தோம். அவர்கள் இருவருமே, வரு விழியால் காத்திருப்பது போல,தாணிப்பாறை முதல் தவசிப்பாறை வரை வலம் வந்து, இன்னவர்களுடன் சேர்ந்து வந்த இரு பெண்மணிகள் உட்பட, அத்தனை பேரையும் பத்திரமாய் அழைத்து வந்து சேர்த்ததெல்லாம் அகத்தியன் செய்த ஏற்பாடுதான். அகத்தியன் செய்த ஏற்பாடு காரணமாகவே அத்தனை பேர்களும் தங்கு தடை இன்றி மேலே ஏறினாலும், ஒரு சிலருக்கு மூச்சு வாங்கியது உடலில் சிறு காயம் ஏற்பட்டதெல்லாம் உண்மை. ஈன்றெடுத்த மேஷத்திருமகன் மைந்தனுக்கும் ஆங்கொரு பாதத்தில் கொப்பளமாய் வெடித்தது உண்மை தானடா. பொல்லாத ஊசியது நெறிஞ்சிமுள். தெரிந்தோ, தெரியாமலோ காலிலே குத்தியதால், வந்த புண் தானடா. இருப்பினும், எத்தனையோ தவம் செய்த தன்மையும், சித்தத்தன்மை நோக்கி வருவதினாலும் அஷ்டமா சித்தியில், மோகன சித்தியை அன்றாடம் தப்பாமல் முறையாக செய்து வருவதாலும், அந்த காயம் ஒன்றும் இல்லாமல் போனாலும், சிறிதளவு உள்ளத்தில் பாதித்தது உண்மை தான். எதற்காகச் சொல்லுகிறேன் எனில் பாதை கரடு முரடாக இருந்தது மட்டுமல்ல, வாழ்க்கையில் பலவித இடையூறுகள் ஏற்படும் என்பதால், அதையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அகத்தியன் செய்துவிட்ட நாடகமே என்றுணர்ந்து அமைதியாகுக. மற்றவர்களும், அனைவரும் பய பக்தியோடு, அங்கொரு மலை மீது தான் ஏறி குதித்து, மந்தி போல் ஏறி குதித்து மூச்சு வாங்கி, ஆசையோடு மேல் ஏறி அமர்ந்த கண் கொள்ளா காட்சி எல்லாம், அகத்தியன் மேலிருந்து ரசித்தேனடா.
அகத்தியன் ஆங்கொரு யாகம் செய்வதற்கு, ஓரிடத்தை தேர்ந்தெடுத்தோம், தவசிப் பாறைக்கு வடகிழக்கு நேர் கீழே. வடகிழக்கு திசைக்கு தெற்கே யாம் அமர்ந்தோம். ஆச்சரியம் என்னவெனில், பிரம்ம தேவன் தெய்வம் அங்கு வந்து அமர்ந்தானடா. அதுவே யாங்கள் செய்த பாக்கியமடா. பிரம்மதேவனே அங்கமர்ந்து "சுக்லாம் பரதரம்" என்று சொல்லிக் குட்டி ஆங்கொரு விநாயகர் ஹோமத்தை ஆரம்பித்து வைத்தான். இது நடந்ததொரு காலம் எல்லாம் காலையில் பிரம்ம முஹுர்த்தத்தில். ஆகவே, மூன்று மணிக்கு அங்கிருந்த நபர்களுக்கெல்லாம், அவர்கள் நாள் செய்யவே,யாகத்தின் வலிமையையும், சாம்பிராணி புகையையும், நெய்யது வாசனையையும் நுகர வைத்தோம். நெய்யது வாசனையை யார் யார் நுகர்ந்தார்களோ, அவர்களெல்லாம் பாக்கிய சாலிகள். ஏன் என்றால் ஐங்கரன் வேள்விதனை, அத்தனை சித்தர்களும், 18 சித்தர்கள் உட்பட, பக்குவமாய் செய்து கொண்டிருக்கிறோம். அந்த காட்ச்சிதான் கண் கொள்ளா காட்சி. ஆச்சரியம் என்னவெனில், ஐங்கரனே அங்கு வந்து அமர்ந்து ஆனந்தத்தால், எங்கள் தலையை தடவி, எங்களை ஆராதித்தான்.ஐங்கரனால் ஆசிர்வதிக்கப் பட்டபொழுது, சித்தர்கள் நாங்களே ஆச்சரியப் பட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப் பட்டதாக எண்ண வேண்டாம், அதை நாசியில் நுகர்ந்த அத்தனை பேருக்கும் அந்த பாக்கியம் கிட்டியதடா. ஆகவே, இந்த அனுபவம் யாருக்கும் கிடைக்காத ஒரு அனுபவம். சோம்பலாக அல்ல, நடந்து வந்த களைப்பால் தூங்கியவர்களுக்கெல்லாம் சில காட்ச்சியையும், முழித்துக் கொண்டே ஏங்கியவர்களுக்கு, சில சித்தர்கள் தரிசன காட்ச்சியையும், வேறு சில காட்ச்சிகளையும் ஏற்பாடு செய்துவிட்டேன். யாருக்கும் எக்குறையும் வரக் கூடாது என்பதுதான் அகத்தியன் எண்ணம். அதை நான் ஈடேற வைத்தது உண்மைதான். அகத்தியனோடு சேர்ந்து 17 சித்தர்கள், பிரம்மாவும்,விநாயகரும், ஆங்கொரு என்னப்பன் முருகனும் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து இருந்து ஆங்கொரு யாகத்தில் இருந்ததெல்லாம் கண்கொள்ளா காட்சி எல்லாம் உண்மை.
விண்ணவர், விண்ணில் வாழும் தேவர்கள் பெரும்பாலும் அங்கு வந்து அமர்ந்து கொண்டு அந்த யாகத்தை கண்கொள்ளா காட்ச்சியாக கண்டார்களடா. அவர்களுக்கும் அந்த பாக்கியம் கிட்டியதடா. ஏன் என்றால் இந்த யாகம், ஏறத்தாழ 3247 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து, அப்பொழுது காக புசுண்டர் தலைமையில் நடந்த யாகமடா!

மூதேவியை விரட்டி ஶ்ரீதேவியை வரவேற்போம்

சுமங்கலி பெண்கள் தலைவிரி கோளத்தில் இருக்க கூடாது, தலையை இரு கைகளாலும் சொரிதல் கூடாது.
*பெண்கள் பூசனைகாய் உடைத்தல் கூடாத
*அருகாகாலில் தும்புவது, அமர்வது, சாபிடுவது என கூடாது ,அம்மி,அடுப்பு, உரல் என உட்கார கூடாது.
* கிழிந்த உடைகள் உடுத்த கூடாது.
*அபசகுன வார்த்தைகள், சனியஏனெ எனவும் பேச கூடாது.
*மொரத்தை கவிழ்த்தும், படியை கவிழ்த்தும் வைக்க கூடாது.
*குளிக்கும் முன் தன்ணீரில் சிறிது கட்டி தயிர் போட்டு ஏழு நாட்கள் குளித்து வந்தால் தரித்திரம் நீங்கும்.
*குளித்த பின் நம்மிடம் முதலில் இடம் பிடிப்பது மூதேவியெ, பிறகுதான் ஶ்ரீதேவி வருவாள், அதனால் முதலில் முதுகினை துடைத்து பின்னரெ முகத்தை துடைக்கவும்.
*48 நாள் தொடர்ந்து வீட்டில் கோமியம் தெளித்துவர மூதேவி அகன்று ஶ்ரீதேவி வாசம் செய்வாள்.
*நம் உடலானது ரத்ததால் ஆனது மனித வாசனை ஶ்ரீதேவிக்கு ஏற்றதல்ல, ஏதெனும் பக்தி கமழும் வாசனை திரவம் பூசிக்கோள்வதால் ஶ்ரீதேவி நம்மிடம் உறைவாள்.

இன்பத்தின் இரகசியம்

1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்.
2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.
3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.
4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.
6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை.
கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.
7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.
8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.
9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.
10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.
11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன ? அவன் நேற்றைவிட இன்று அதிக
அறிவு பெற்று விட்டான் என்பதே.
12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதைக் கசப்பாக்கி விடாதீர்கள்.
13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.
14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன்.
15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.
16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.
17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.
18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.
19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.
20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா ? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.

கோடீஸ்வரனாக்கும் குபேர இரகசியங்கள் !!!

வந்த செல்வத்தை மதித்துப் போற்றுங்கள். வராத வருமானத்தை எண்ணி ஏங்காதீர்கள். அவற்றின்மீது ஆசை வைக்காதீர்கள். பணம் வந்தால் வாய்பிழந்த ஏழைகளுக்கு வாரி வழங்கி வள்ளலாவேன்! என்று இறைவனிடம் திரும்பத் திரும்பக் கூறுங்கள். குபேர வாசலைத் திறந்து விடுவார். வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும்.
* பணத்தைப் பிறரிடம் வழங்கும்போது தலைப் பகுதியியை நம் பக்கம் வைத்தபடி வழங்கிப் பிரியா விடைதரவும்.
*வாடகை..... பலசரக்கு.... பால்பாக்கி... எனப் பணத்தைப் பிறருக்கு வழங்கும்போதெல்லாம், சீக்கிரம் வேறு வழியில் என்னிடம் வந்து சேர்! எனப் பிரியா விடை கொடுத்து அனுப்புங்கள்.
* ஈரம், ஈரத்தை ஈர்ப்பதுபோல் ஏற்கனவே இருக்கும் பணம்தான் புதிய பணத்தை ஈர்த்து வரும். எனவே பர்சில்... வங்கியில்.... பீரோவில் வறட்சி கூடாது. இருப்புத் தொகை அதாவது குறிப்பிட்ட தொகை இருக்கும்போதே செலவை நிறுத்தி விட வேண்டும். நாள்தோறும் கண்கள் பணத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும் வகையில் பசுமையைப் பராமரிக்கவும்.
*தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள். வீடு.... அலுவலகம்.........கல்லாப்பெட்டி.....பணப்பை.... எனச் செல்வம் புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும்.
*வணிகத்தை... தொழிலை.... அலுவலகப் பணியை மனமலர்ச்சியுடன் விளையாட்டகச் செய்யுங்கள். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். சிடுமூஞ்சிகளையும் அழுமூஞ்சிகளையும் பார்த்து மூதேவிதான் விரும்பி வருகிறாள். சிரித்து வாழுங்கள். சிரிப்பவர்களுடன் சேர்ந்து வாழுங்கள்.
*குபேர லிங்கம் படத்தைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பண வருமானம் குறையாது.
* கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும். வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.
ஓம் ........ஹ்ரீம்.......க்ளீம்சௌம்........ஸ்ரீம்......கும் குபேராய........... நரவாகனாயயக்ஷ ராஜாய...... தன தான்யாதிபதியே............ லக்ஷ்மி புத்ராய......ஸ்ரீம்........ ஓம்....... குபேராய நமஹ.........!
உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம்
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம்
அரசு மருத்துவமனை எதிரில்
ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)
M.கிருஷ்ண மோகன் 8526223399
மனம் தரும் பணம்! போன்ற பொன்மொழிகளை உணர்ந்து முதலில் மனத்தைப் பணக்கார மனமாக மாற்றுங்கள். வெகுசீக்கிரம் வெளியில் பணக்காரன் ஆகிவிடுவீர்கள்.
ஈசனின் அருளால் மற்றவர்களுக்கு நன்னெறிகளை கற்பிப்பதும், நல்லனவற்றை சிந்திப்பதும், பேசுவதும், எழுதுவதும் சேவை செய்வதும், பூஜை செய்வதுமே ஆகும். இறைவன் நமக்கு கொடுத்த சக்தியினை, புத்தியினை நாம் வீணாக பயன்படுத்துவதை அவர் ஒருபோதும் விரும்ப மாட்டார், இதை முதலில் கவனத்தில் கொள்ளுங்கள்.

துளசியின் அனுபவ வைத்திய ரகசியம்'

நமது தேசத்தில் இருபத்திரண்டு துளசி வகை உள்ளன.அவற்றில் நாம் பொதுவாக காண்பது நல்துளசி ராமதுளசி கருந்துளசி கிருஷ்ணதுளசி நாய் துளசி கஞ்சாங்கோரை மற்றும் எலுமிச்சம் துளசி,கற்பூரத் துளசி,செந்துளசி,நிலத்துளசி,நீர்த்துளசி,கல்துளசி,முள்துளசி முதலியன.
"ஐயம் வயிறுளைச்ச லஸ்தி சுரந்தாகமும் போம்
பைய சுர மாந்தம் பறக்குங்காண் - மெய்யாக
வாயின ரோசனம் போம் வன்காரஞ்சூடுள்ள
தூய துளசி தனைச்சொல்"
கார்ப்பும்.வெப்பமும் உள்ள துளசியினால் கபதோஷம்,வயிறுளைத்தல்,அஸ்தி , தாகம் மாந்த சுரம், அருசி இவைபோம்
வைணவ கோயில்களில் துளசியினால் மூலவருக்கு அர்ச்சனை செய்வதோடின்றி. இதை தண்ணீர் விட்டு தீர்த்தம் என்று நமக்கு ஒரு உச்சிக்கரண்டி கொடுக்கிறார்கள்.இதனால் என்ன பயன் என்று நாம் சிந்திப்பதில்லை. சுவாமி பிரசாதமென்று பயபக்தியுடன் சாப்பிடுகிறோம். இது என்றோ ஒருநாள்நடப்பது.
ஹிந்துக்கள் வீடுகளில் பொதுவாக பூஜை அறை என்று ஒரு சிறு அறையிருக்கும். இதில் பெருமாள், அம்பாள், முருகர், சிவன், விநாயகர் என பல படங்கள் இருக்கும்.தினம் இங்கு பூஜை செய்த பின்பே மற்றகாரியம் பார்ப்பார்.சைவர்கள் வில்வத்தை கொண்டு அர்ச்சித்தும், வைணவர்கள் துளசி தீர்த்தம் சாப்பிட்ட பிறகே உணவு உன்ன செல்லுவர்.
துளசியின் மருத்துவ குணங்களை ஆராய்ந்தோமானால் நம் முன்னோர்கள் எத்தனை அறிஞர்கள் என்பதை அறியலாம்.
துளசி தீர்த்தத்தை பிரதி தினமும் எப்பொழுதும் தொடர்ந்து சாப்பிடுவர்களுக்கு புற்றுநோய் அணுகாது.
புற்றுநோய் எந்த உறுப்பிலிருப்பினும் துளசி இலை இருபத்தொன்று, மிளகு ஆறு சேர்த்து பசுமோர் விட்டு அரைத்து, காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட குணம் காணலாம்.
குழந்தைகளுக்கு இது ஓர் சஞ்சீவி. குழந்தைகளுக்கு அவ்வப்பொழுது சளி,இருமல்,சுரம் வந்தால் டாக்டர்கள் அந்நோய்க்கு பிரைமரி காம்பளக்ஸ் என்று பெயரிட்டு ஸ்ரெப்டோமைசின் என்ற ஊசிகள் கணக்கின்றி ஏற்றுவர்.
இம்மருந்து உடலில் உள்ள உயிரணுக்களைக் கொன்று இயற்கையில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து விடுகிறது.இச்சிகிச்சை முடிந்த பின்பு டாக்டர்கள் X-Ray படம் எடுத்து பார்த்துவிட்டு நோய் நீங்கியது என்பர்.ஆனாலும் அக்குழந்தைக்கு சளி,இருமல் தொல்லை இருந்த வண்ணம் இருக்கும்.அது மட்டுமின்றி நாளுக்கு நாள் மெலிந்து விடும்.சில குழந்தைகளுக்கு காத்து கூட கேட்பதில் மந்தமாகும்.
குழந்தைகளுக்கு சளி,கபம் அடிக்கடி பிடிக்கும்.இதில் தப்பில்லை. அதற்காக துளசி இலை இருக்கையில் ஊசிகள் ஏன்.
இரவில் ஒரு கோப்பையில் காய்ச்சி ஆறிய தண்ணீர் விட்டு அதில் ஏழு துளசி இலைகளைப் போட்டு மூடி மறுநாள் காலை வெறும் வயிற்றில் வயதுக்கு தக்கவாறு ஒரு பாலாடை முதலி அரை கோப்பை வரையில் கொடுத்துவர அடிக்கடி வரும் ஈளை, இருமல்,சுரம் முதலிய நோய்கள் குணமாவது தவிர அது நோய் தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தும்.
துளசி இலைகளை புட்டவியலாக வேக வைத்து சார் பிழிந்து ஒரு தேக்கரண்டியளவு எடுத்து கொஞ்சம் தேன் கூட்டி சுரம்,சளி முதலிய நோய்களுக்கு கொடுக்க இரண்டு வேலைகளிலேயே குணமாகும்.
பிணத்தின் கீழ் மேல் துளசியிலைகளை பரப்பி மூடிவைத்தால் அப்பிணம் இரண்டு மூன்று நாட்டகள் வரை அழுகாது காக்கும் தன்மை பெற்றது.
பிணத்தையே அழுகாது காக்கும் மூலிகை உயிருடன் வாழும் நம்மை காப்பதில் ஐயமுண்டா.
இந்துக்களின் வீடுகளில் துளசி செடியை தொட்டியில் வைத்து பிரதி தினமும் வணங்குவர்.இதை "துளசி மாடம்" என்பர்.நம் மூதாதையர் காலத்திலிருந்து வரும் இப்பழக்கத்தினால் அவர்தம் மருத்துவ ஞானத்தை என்னென்று சொல்லுவது.
ஆங்கில ஆடம்பர மருத்துவம் இந்நாட்டில் முந்நூறு வருடங்களுக்கு முன் நுழைந்தது.அதற்கு முன் நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக ஊசியை நம்பித்தான் ஆரோக்கியமாகவும்,அமைதியாகவும் வாழ்ந்தார்களா? சிந்தனைக்குரியது.
நாகரீகம் என்ற பெயரால் அநாகரீகமான பல பழக்கவழக்கங்களை நாம் மேற்கொண்டு பல நோய்களை வருவித்துக் கொள்ளுகிறோம்.நம் மூதாதையர்களை விஞ்ஞானம் தெரிய அஞ்ஞானிகள் என சிலர் எண்ணுகின்றனர்.மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டுமென்று சிந்திக்கும் வைத்தியம், ஞானம், யோகம் முதலியவைகளை இரவு பகலாக ஓலை ஏடுகளில் நம் மூதாதையர்கள் எழுதி வைத்துள்ளனர்
.
ஆகவே அவர்கள் காட்டிய துளசியை வணங்குங்கள், உபயோகியுங்கள், நீடூழியாய் ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.
நன்றி.
வர்மக்கலை ஆசான்.எஸ்.கோபாலகிருஷ்ணன்
+919894285755

#‎ஐஸ்வர்யம்_பெருக_வழிமுறைகள்‬....

1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்க்கவும்.
2. குளித்தபின்பு முதுகை முதலில் துடைக்கவும். பின்பு, முகத்தை துடைக்கவும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.
3. பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது.
4. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டு கொண்டு தான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.
5. இரவில் தயிர் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
6. பூஜை அறையில் பழனியாண்டவர் படம் வைப்பதாக இருந்தால், ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருப்பின் அதை எடுத்து விட்டு ராஜா கை வைத்து இருப்பது போல் வைக்கவும்.
7. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்கவும்.
8. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
9. படத்திற்கும், கல்லாபெட்டிக்கும் அல்லது பீரோவிற்கும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.
10. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
11. லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும்.
12. வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகர் படங்களை மாட்டவும்.அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும். அதை விடுத்து அரக்கர் படமோ. விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமோவெல்லாம் மாட்டக் கூடாது.
13. ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்க மகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். அப்போதுதான் அருள்செல்வம் முதலில் வரும். அதன்பின் பொருள்செல்வம் தானே வரும்.
ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!

தலைச்சுற்றலுக்கு கறிவேப்பிலை தைலம்

தலைவலியை உணராதவர்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ:
கறிவேப்பிலை - 200 கிராம்
பச்சை கொத்தமல்லி - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
நல்லெண்ணை - 600 கிராம்
பசுவின் பால் - 200 மில்லி
கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.
சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.