Tuesday, 12 January 2016

பணம், தங்கம் சேர ஸ்ரீ ஸ்வர்ண கணேசர் மந்திரம்



ஓம் நமோ ஹேரம்ப
மதமோதித ஹஸ்தி முகாய
மம ஸ்வர்ண ப்ராப்தம்
குருகுரு ஸ்வாஹா

இம்மந்திரத்தை தினமும் உங்கள் வீட்டுப்பூஜையறையில் 108 முறை வீதம் ஜபித்து வரவேண்டும். இப்படி குறைந்தது 90 நாட்கள் (மாதவிலக்கு நாட்கள் தவிர்த்து) ஜபித்து வந்தால் வீட்டில் பணம், தங்கம் சேரும்; மிச்சமாகும்.

முக வசிய மந்திரம்

நமது முகத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகுவதற்கும் மற்றவர்கள் எம்முடன் கோபப்படாமலும் நன்றாக பழக இம் முகவசிய முறையினை பயன்படுத்தலாம்.

ஓம் வெள்ளி என்முகம்
வியாழன் என்முகம்
திங்கள் என்முகம்
திசைகள் எட்டும் என்முகம்
காளி என்முகம்
காயத்ரி என்முகம்
நீலி என்முகம்
நீலகண்டி என்முகம்
ராமரும் லட்சுமணரும் போலே
அம்மா தாயே லட்சுமணர் எல்லோரும்
பார்த்தால் போலே சிரித்த முகமும்
சீதாதேவியார் நிற்க
 சிதம்பர அட்சரத்தின் மேல் ஆணை
ஐந்தெழுத்து பஞ்சாட்சரமும்
என்முகத்தில் நிற்கவே சுவாகா.


- பவுர்ணமி தினத்தில் உரு 108 கொடுத்து சித்திசெய்து கொள்ளவும். பின்னர் பிரயோகிக்கும் போது 21 தரம் சொல்லி விபூதி சாத்தவும்.

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க மந்திரம்



ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே மஹ்யம்
மேதாம் ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா

* சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு இம்மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் உச்சரிக்க செய்ய வேண்டும்.

* நேர்முக தேர்வு செல்லும்போதும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.

* ஆசிரியர்கள், வக்கீல், ஜோதிடர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு முன்னேற்றம் தரும் மந்திரம் இது.

பஞ்சமி திதியில் சொல்ல வேண்டிய மந்திரம்



அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி. ’பஞ்ச’ என்றால் ஐந்து என்று பொருள். பஞ்சமி திதியன்று குத்துவிளக்கில் ஐந்து எண்ணெய் கலந்து ஐந்து முகத்தினையும் ஏற்றி கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும். தீபத்தில் எரியும் ஐந்து முகங்களில் ஏதாவது ஓர் தீபத்தை உற்றுப் பார்த்தபடியே மனதை ஒரு முகப்படுத்தி நம்முடைய வேண்டுதல்களை மனதிற்குள் சொல்லி வந்தால் அது நிச்சயம் நிறைவேறும்.

இப்படி ஜோதியை நோக்கி வழிபடும்போழுது

’ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும்.

இப்படிச் செய்தால் அம்பிகையின் அருளால் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.

Monday, 11 January 2016

காக்கையை பித்ருக்களாக நினைப்பது ஏன்?

காக்கையை பித்ருக்களாக நினைப்பது ஏன்?

காக்கை கரைவதற்கும், சகுனம் போன்றவற்றுக்கும் அதிக முக்கியத்துவம் தருவது ஏன்?

சிருஷ்டியில் மனிதனை விட பறவைகள் மற்றும் மிருகங்களுக்கு ஒருசில விசேஷ சக்திகள் இறைவனால் அருளப்பட்டுள்ளன.

குறிப்பாக முன் ஜன்மத் தொடர்பும், முற்பிறவி நினைவாற்றலும் பசு, நாய் போன்ற சில மிருகங்களுக்கும், காக்கை, கருடன் போன்ற சில பறவைகளுக்கும் உண்டு.

இவ்வுலகில் சில காலம் வாழ்ந்து இறந்துவிட்ட முன்னோர்கள், அவரவர்களின் கர்மவினைக்கேற்ப மரம், செடி, கொடி, புழு, பூச்சி, பறவை, மிருகம், மனிதன் போன்ற பற்பல வடிவில் மறுபிறவி எடுக்கிறார்கள்.

ஆனாலும், இவ்வாறு மறுபிறவி எடுக்கும் முன்பாக பித்ருக்கள் சில காலம் காக்கை வடிவில் இருப்பார்கள். அதன்பின்னரே அவர்களின் கர்ம வினைகள் யமதர்ம ராஜ சபையில் ஆராயப்பட்டு அவரவர்களுக்குரிய பிறவிகள் தீர்மானிக்கப்பட்டு வேறு பிறவிகளை எடுக்கிறார்கள்.

ஆக, ஒவ்வொருவரும் இறந்த பின்னர் சில காலம் (இறந்தவருக்கான அடுத்த பிறவி தீர்மானமாகும் வரை) காக்கை வடிவில் இருக்க வேண்டும் என்பது நியதி. ஆகவேதான், காக்கையை பித்ருக்கள் வடிவில் காண்கிறோம். மேலும், இறந்தவர்களுக்காக சிராத்தம் செய்யப்படும்போது (திதி கொடுக்கும்போது), இறந்தவரின் பெயரைச் சொல்லி அளிக்கப்படும் பிண்டத்தை (சாத உருண்டையை) காக்கைக்கு வைக்க வேண்டும் என்றும், அந்த சாதத்தை காக்கைகள் சாப்பிடுவதால் பித்ருக்களான முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

குருவி, காக்கை, கருடன் போன்ற பறவைகள் எழுப்பும் சப்தத்தின் (ஒலியின்) மூலம் எதிர்கால நிகழ்வைத் தெரிவிப்பது ‘சகுன சாஸ்திரம்’ எனப்படும்.

இதில், பறவைகள் எழுப்பும் ஒலிக்கு, அந்த ஒலியை எழுப்பும் பறவை, ஒலி எழும் காலம், திசை ஆகியவற்றுக்கு ஏற்ப தனித்தனி பலன்கள் உண்டு. அதன்படி காக்கை எழுப்பும் ஒலிக்கும் தனிப் பலன் உண்டு.

நமது பார்வைக்கு, மற்ற பறவைகளைக் காட்டிலும் காக்கைகளே அதிகமாகக் காணப்படுவதாலும், காக்கை எழுப்பும் சப்தம் மற்ற பறவைகளின் சப்தத்தைவிட சற்று அதிகமாக இருப்பதாலும், காக்கை எழுப்பும் சப்தத்தின் பலன் நமது நினைவில் இருக்கிறது, மற்ற பறவைகள் எழுப்பும் சப்தத்தின் பலன் நினைவில் இருப்பதில்லை.

இதையொட்டியே காக்கை சப்தித்தால் (கரைந்தால்) விருந்தாளி வரப் போகிறார் போன்ற சிற்சில சகுன சாஸ்திர பலன்கள் நம்மால் நினைவு கூரப்படுகின்றன.

12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள்

ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம்செய்து வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள். எல்லாவித செல்வமும் தேடி வரும்.மேலும் ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது.
கடகம்: கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்காலாம். இது உங்களை முன்னேற்றும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல்தானம் செய்யுங்கள். இதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு சேரும். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுத்தால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.
விருச்சகம்: விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம். மேலும் அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். மேலும் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம்செய்தால் வாழ்வு செழிக்கும். மேலும் வயதான பெண்களுக்கு தானம் செய்தால் நல்லது.
மகரம்: மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும்போது தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும். மேலும் ஏழை நோயாளிகளுக் மருந்து மாத்திரி வாங்கி கொடுத்தால் வளமான வாழ்வு அமையும்.
மீனம்: மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகு

Sunday, 10 January 2016

தியானத்தின் பலன்கள்

தியானத்தின் பலன்கள் சில :

கவனம் அதிகரிக்கும்.
எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்
மன நலம் மேம்படும்
வலியைத் தாங்கும் உறுதி கிடைக்கும்
சக்தி நிலை உயரும்
பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும்
மன அழுத்தம் மறையும்.
வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்
சுவாசம் சீராகும்.
இதயம் பலப்படும்
புத்தி கூர்மையடையும்

மன அமைதியுடன் மகிழ்ச்சியாக வாழவே நாம் விரும்புவோம். அதற்கு ஆழ்நிலை தியானம் ஒன்றே சிறந்த வழி. எனவே நன்றே செய்க அதை இன்றே செய்க. வாழ்க வளமுடன்!