Sunday, 10 January 2016

கொய்யா இலை இருக்க கவலை ஏன்?

கொய்யா இலைகளை கொதி நீரில் போட்டு கஷாயமாக்கிக் குடித்தால், உதிரப் போக்கு தடைபடும். மேலும் கொய்யா இலை கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.
கொய்யாப் பழம் மலச்சிக்கலைப் போக்கும். கொய்யா இலை கஷாயம் வாந்தி-பேதியைத் தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் கொய்யா இலையைக் காய்ச்சி கொப்பளிக்கலாம்.
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன.
கொய்யா மரத்தின் இளம், புதுக் கிளைகளின் இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
கொய்யா இலைகளை வாயில் போட்டு மென்றால், வயிற்றுப் புண், பல் வலி நீங்கும்.

தீபம் பேசும் மந்திரம்

ஏதாவது ஒரு அமாவாசை அன்று 50 கிராம் பசுநெய்யும், 50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும். இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். விளக்கில் இருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.



நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும். 108 முறைக்கு குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்து வரவேண்டும். வாயாலும் சொல்லலாம்.

’ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா’

சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும், நீங்கள் கண்கூடாக உணர முடியும். இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்.

ஜன வசியம் கொடுக்கும் துர்க்கை ஸ்லோகம்

இந்த துர்க்கை ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் சர்வ ஜன வசியம் ஏற்படும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது





துர்கே ஸம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ:

ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி

தாரித்ர்ய-து:க-பய-ஹாரிணி கா த்வதந்யா

ஸர்வோபகார- கரணாய ஸதார்த்ர-சித்தா

நாகதோஷம் நீங்க, புத்திர பாக்கியம் கிட்ட ஸ்லோகம்

ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரத்னமௌளிர் நிரங்குஸ:|
ஸர்ப்பஹார கடீசூத்ர : சர்ப்ப யக்ஞோபவீதவாந் ||
ஸர்ப்பகோடீர கடக: சர்ப்ப க்ரைவேய காங்கத:|
ஸர்ப்ப கக்ஷோதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:||
சர்வ வஸ்யகரோ கர்ப்பதோஷஹா புத்ரபௌத்ரத :||

- இந்த ஸ்லோகத்தைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர சர்ப்பதோஷம் நீங்கும். சர்ப்ப தோஷத்தினால் குழந்தை பாக்கியம் உண்டானால் அது விலகி குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதை அரசமரமும், வேப்பமரமும் இணைந்த இடத்தில் உள்ள விநாயகரின் முன் ஜெபிக்க நிறைவான பலன் கிடைக்கும்.

நினைத்தது நிறைவேற வாராஹி மந்திரம்





ஓம் வராஹமுகி வித்மஹே
ஆந்த்ராஸனீ தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்

- இந்த மந்திரத்தை தினமும் பயபக்தியுடன் சொல்லி வந்தால் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும்.

ஸ்ரீ சக்கரம் மந்திரம்

ஸ்ரீ சக்கரம் இருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் உண்டு)



ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர
ஸ்வரூபிணி சர்வலோக ஜனனீ
சர்வாபீஷ்ட ப்ரதாயினி மஹா த்ரிபுரசுந்தரி
மஹாதேவி சர்வாபீஷ்ட சாதய சாதய
ஆபதோ நாசய நாசய சம்பதோப்ராபய
ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ

மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்கள்

பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய, சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில்உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும்.